ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், Motorola Razr (2019) விற்பனை மே 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
Motorola Razr (2019) விற்பனை, மே 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக, மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், Motorola Razr (2019) ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை மே 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Motorola Razr (2019) இந்தியாவில் மார்ச் 16 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. போனின் ஒரே 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.1,24,999 ஆகும்.
Motorola Razr (2019) 6.2 இன்ச் ஃப்ளெக்சிபில் OLED HD + டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனின் மேல் கவரில், இரண்டாம் நிலை 2.7 இன்ச் குயிக் வியூ பேனலும் உள்ளது. இது போனை திறக்காமல் செல்பி எடுக்க, notifications-ஐக் காண மற்றும் music playback கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இந்த போன், ஆண்ட்ராய்டு 9 பை-ல் இயங்கும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 SoC-யால் இயக்கப்படுகிறது.
போனில், 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் உள்ளது. போன் மடிந்த நிலையில் இருக்கும்போது செல்பி எடுக்க முதன்மை கேமரா அமைப்பைப் பயன்படுத்தலாம். போனில் தனி செல்பி கேமராவும் உள்ளது. இது பிரதான டிஸ்பிளேவுக்கு மேலே உள்ளது மற்றும் 5 மெகாபிக்சல் பட சென்சாரைக் கொண்டுள்ளது.
Motorola Razr (2019), 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்க முடியாது. chin-ல் ஆப்டிகல் கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 2,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked